Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூலில் சுணக்கம் காட்டும் சுந்தர் சியின் ‘கேங்கர்ஸ்’!

vinoth
புதன், 30 ஏப்ரல் 2025 (13:36 IST)
’கேங்கர்ஸ்’ படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் ஓடிடி வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் படம் ரிலீஸான நிலையில் வழக்கம் போல பெரிய அளவில் நேர்மறையான விமர்சனம் கிடைக்கவில்லை. ஆனால் சுந்தர் சி படங்களுக்கு என்றுதான் நல்ல விமர்சனம் வந்துள்ளது?. ரசிகர்கள் மத கஜ ராஜா படத்தை எல்லாம் பார்த்துக் கொண்டாடவில்லையா?. அந்த வகையில் இந்த படத்துக்கு முதல் நாள் வசூல் கணிசமாக இருந்துள்ளது. முதல் நாளில் இந்த படம் தமிழக அளவில் சுமார் 60 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது.

அதன்பின்னர் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லையாம். இதற்கிடையில் நாளை சூர்யாவின் ‘ரெட்ரோ’ மற்றும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ ஆகிய படங்கள் ரிலீஸாகும் நிலையில் கணிசமான திரையரங்குகளில் இருந்து ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் தூக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் அடுத்த படத்தில் கதாநாயகி மிருனாள் தாக்கூரா?

ஜனநாயகன் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்… கொடைக்கானல் செல்லும் படக்குழு!

நாளைக்கு எங்க தியேட்டர்ல்ல ஸ்பெஷல் ஷோ போட்றோம்: சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ டிரைலர்

சந்தானத்தை இயக்குகிறாரா கௌதம் மேனன்?... வெளியானத் தகவல்!

எங்கள் படத்தை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்… நானி பட இயக்குனர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments