சூர்யாவின் அடுத்த படத்தில் கதாநாயகி மிருனாள் தாக்கூரா?

vinoth
புதன், 30 ஏப்ரல் 2025 (13:32 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படம் வரும் வியாழக் கிழமை ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையடுத்து சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. வெங்கட் அட்லூரி இயக்கும் சூர்யாவின் 46 ஆவது படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடியவுள்ளதாம். இந்தப் படத்தை லக்கி பாஸ்கர் புகழ் வெங்கட் அட்லூரி இயக்குகிறார். கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது மிருனாள் தாக்கூரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இருவரில் ஒருவர் கதாநாயகியாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments