Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேங்கர்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?.. வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (15:19 IST)
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அரண்மனை 4 படமும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான ‘மத கஜ ராஜா’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போட்டுவிட்டு வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தை முடித்துள்ளார்.  இந்த படத்தில் ரெஜினா, முனீஸ்காந்த், மைம் கோபி ஆகியோர் நடிக்க சத்யா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் 24 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் ஓடிடி வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

’இந்தியன் 2’ ‘ரெட்ரோ’வை விட மோசம்.. முதல் நாள் ‘தக்லைஃப்’ வசூல் இவ்வளவு தானா?

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments