Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா: இத்தோடு விட்டுவிடு... வைரலாகும் நடிகர் வடிவேலுவின் எமோஷனல் வீடியோ!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (09:09 IST)
கொரோனா விழிப்புணர்வை குறித்து  உருக்கமான பாடல் பாடியுள்ளார்  நடிகர் வடிவேலு...

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்துவரும் நேரத்தில் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் கொரோனா குறித்த மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். மேலும் வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடித்துள்ளனர்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.   அந்த வகையில் தற்போது வைகைப்புயல் வடிவேலு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். கொரோனாவை வெல்வோம் என்ற தலைப்பில் உருக்கமான பாடல் வரிகளை கொண்டு கல்நெஞ்சக்காரர்களையும் கரைய வைத்துவிட்டார் வடிவேலு. இதோ அவர் பாடிய பாடல்....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments