Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜ்கிரணுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுதா மக்களே?

Advertiesment
ராஜ்கிரணுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுதா மக்களே?
, ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (10:56 IST)
நடிகர் வடிவேலு சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் ராஜ்கிரணுடன் இருக்கும் ஒரு புகைப்படம் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமான வடிவேலு, கவுண்டமணி செந்தில் என்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்து தமிழக மக்களை தினசரி சிரிக்க வைத்து சிரிப்பு ராஜாவாக முடி சூட்டிக்கொண்டார். அதன் பின் அவர் இல்லாத நாள் தமிழர்களுக்கு இல்லை. அவர் வசனங்களை பேசாத தமிழர்கள் இல்லை என்ற நிலை உருவானது.

ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் வடிவேலுவின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் இருந்தது. திரை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ராஜ்கிரணின் பழக்கம்தான் வடிவேலுவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ராஜ்கிரணோடு வடிவேலு திருமணம் ஒன்றில் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தான் நடித்த படத்திற்கே பிளாக்கில் டிக்கெட் விற்ற நடிகர்!