கோவை சரளா தமிழ் சினிமாவின் இன்னொரு மனோரமா.. வடிவேலு பாராட்டு!

vinoth
சனி, 26 ஜூலை 2025 (10:38 IST)
மாமன்னன் படத்த்தின் வெற்றிக் கூட்டணியான பகத் பாஸில் மற்றும் வடிவேலு  மீண்டும் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளனர். படத்தில் விவேக் ஹர்ஷன் மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுதேஷ் சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 படம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீஸாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் சம்மந்தமாக அளித்துள்ள நேர்காணலில் கோவை சரளாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார் வடிவேலு. அதில் “கோவை சரளா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச் சிறப்பாக நடிப்பார். நான் சொல்லவேத் தேவையில்லை. பிறவி நடிகை அவர். தமிழ் சினிமாவின் இன்னொரு மனோரமா. இந்த படத்தில் எனக்கும் அவருக்கும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. ஆனால் அந்த கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக நடித்துள்ளார்” என சிலாகித்துள்ளார்.

ஒரு காலத்தில் வடிவேலுவும் கோவை சரளாவும் நகைச்சுவை ஜோடியாக பட்டையைக் கிளப்பியவர்கள். பின்னர் பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சேர்ந்து நடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிவுக்கு வந்தது 'ஹார்ட் பீட் - 2' .. மூன்றாம் பாகம் உண்டா?

பிக் பாஸ் 9: இந்த வாரம் சிறைக்குச் சென்ற போட்டியாளர்கள் யார் யார்?

லோகா ஓடிடி குறித்து அறிவித்த ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

புதுப்பேட்டை 2 பாதி முடிஞ்சது… ஆயிரத்தில் ஒருவன் 2…?- செல்வராகவன் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments