தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை திரைப்படம் மீண்டும் சென்னை கமலா திரையரங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு வெறும் 50 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்திற்கு புதன்கிழமை வரை டிக்கெட் ஹவுஸ்புல் ஆகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த படத்திற்கு வெகு சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர் என்பதும் முக்கால்வாசி தியேட்டர் காலியாக உள்ளது என்பதும் முன்பதிவு இணையதளம் மூலம் தெரிய வந்துள்ளது.
வடசென்னை திரைப்படம் சென்னை கமலா தியேட்டரில் ஹவுஸ் புல்லாக சக்கை போடு போடுகிறது என பிரபல பத்திரிகையாளர் ஒருவரே ஒரு பச்சை பொய்யை கூறியுள்ளார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் அவர் பல பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
தற்போதைய டிஜிட்டல் காலத்தில் எந்த ஒரு பொய் சொன்னாலும் அதை ஆதாரப்பூர்வமாக நெட்டிசன்கள் மறுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.