சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்துக்கு பின்னர் வாடிவாசல் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. சூர்யா பிறந்தநாள் அன்று வாடிவாசல் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமையை கோல்ட்மைன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் படமே தொடங்கப்படாத நிலையில் இந்தி டப்பிங் உரிமை வாங்கப்பட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 200 கோடி என்று ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சூர்யாவின் மார்க்கெட்டுக்கு அவ்வளவு தொகை எல்லாம் முதலீடு செய்யவே முடியாது என சொல்லப்படுகிறது.