Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்தகட்டத்துக்கு செல்லும் வாடிவாசல்… மதுரையில் முகாமிடும் படக்குழு!

அடுத்தகட்டத்துக்கு செல்லும் வாடிவாசல்… மதுரையில் முகாமிடும் படக்குழு!

vinoth

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:22 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தில் . இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

சமீபத்தில் பேசிய வெற்றிமாறன் மற்றும் தாணு ஆகிய இருவருமே, இந்த படம் விரைவில் தொடங்கும் எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்துக்கான அலுவலகம், மதுரையில் அமைக்கப்பட உள்ளதாகவும், படத்தில் நிறைய மதுரையைச் சேர்ந்த நடிகர்கள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிச்சா சுதீப், சேரன் இணையும் படம் என்ன ஆனது?