Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிவாசல் ஷூட்டிங் தொடங்க தேதி குறித்த வெற்றிமாறன் &தாணு!

vinoth
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (10:57 IST)
விடுதலை படத்தை வெற்றிமாறன் தொடங்கும் முன்பே வாடிவாசல் படத்தை சூர்யா மற்றும் தயாரிப்பாளர் தாணுவோடு இணைந்து அறிவித்தார். ஆனால் சிறிய பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை நான்கு ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக் கொண்டதால் இன்னும் வாடிவாசல் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் வாடிவாசல் கைவிடப்பட்டு விட்டது என்றெல்லாம் தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல் படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாடிவாசல் படத்துக்காக காளைகளை அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் அதை இறுதி செய்வதற்காக இயக்குனர் வெற்றிமாறன் விரைவில் லண்டன் செல்லவுள்ளார். அங்கு சென்று வந்தபின்னர் விடுதலை 2 ரிலீஸ் முடிந்த பின்னர் வாடிவாசல் படத்தின் பணிகளை அவர் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதால், வாடிவாசல் ஷூட்டிங் ஜனவரி மாதம் முதல் தொடங்கிவிடலாம் என வெற்றிமாறன் தயாரிப்பாளர் தாணுவுக்கு வாக்குறுதிக் கொடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments