Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும் நந்திதா தாஸ்!

Advertiesment
10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும் நந்திதா தாஸ்!

vinoth

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (11:39 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா மற்றும் படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் பணியாற்றுகின்றனர்.

படத்தில் சூர்யாவோடு பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், டாணாக்காரன் தமிழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் சமீபத்தில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பிரசாந்த் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது நடிகை நந்திதா தாஸ், இந்தபடத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் கடைசியாக நந்திதா தாஸ் நடித்த படம் என்றால் அது சீனுராமசாமி இயக்கிய நீர்ப்பறவை திரைப்படம்தான். அதன் பின்னர் 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் மூலம் அவர் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?