Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சூரரைப் போற்று ‘’ படத்தின் உசுரே, சகியே என்ற பாடல் ரிலீஸ் ! இணையதளத்தில் வைரல்!!

’சூரரைப் போற்று ‘’ படத்தின் உசுரே, சகியே என்ற பாடல்  ரிலீஸ் ! இணையதளத்தில் வைரல்!!
, செவ்வாய், 10 நவம்பர் 2020 (19:15 IST)
சூரரைப் போற்று என்ற படத்தில் இடம்பெற்றுள்ள உசுரே, சகியே என்ற பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் பல கட்ட தாமதத்திற்குப் பின் வரும் நவம்பர் 14 ஆம் தேதி

அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெய்யோன் சில்லி, காட்டுப் பயலே, ஆகாசம் உள்ளிட்ட மூன்று பாடல்கள் ரிலீசான நிலையில், சமீபத்தில் சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அடுத்த பாடல் வெளியானது.
 


இந்நிலையில் நேற்று இப்படத்தின் உசுரே , சாகியே என்ற பாடல் ரிலீசாக உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

எனவே தற்போது உசுரே ,  சகியேபாடல் ஜிவி.பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்பாடலை வெளியிட்டு, சூரரைப் போற்று படத்தின் ஆல்பம் பாடலையும் வெளியிட்டுள்ளார்.இணையதளத்தில் இப்பாடல்கள் வைரலாகி வருகிறது. இன்று வெளியான பாடல் தனது ஃபேவரெட் என்று சூர்யா டுவீட் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் யூடியூப் லிங்ஸ் கீழே உள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ஷாட்டில் உருவான ‘டிராமா’ படத்திற்கு விஜய்சேதுபதி செய்த உதவி!