Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேத்துமான் இயக்குனரின் இயக்கத்தில் உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்‌ஷன்…!

சேத்துமான் இயக்குனரின் இயக்கத்தில் உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்‌ஷன்…!

vinoth

, வியாழன், 22 பிப்ரவரி 2024 (06:57 IST)
கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் உறியடி. இந்த படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்த விஜய் குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதையடுத்து அவர் இயக்கிய படம்  "உறியடி 2". இதனை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்தார். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது விஜயகுமார் அடுத்து சேத்துமான் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. கிராமத்து பின்னணியில் அரசியல் கதையாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘எலக்‌ஷன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படம் அரசியல் சம்மந்தப்பட்ட கதையாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“உச்ச நட்சத்திரங்கள் யாரும் த்ரிஷாவுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள்…” – இயக்குனர் லெனின் பாரதி ஆவேசம்!