Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவனம் ஈர்த்த உறியடி விஜய்குமார் நடிக்கும் எலக்‌ஷன் படத்தின் டிரைலர்!

vinoth
ஞாயிறு, 12 மே 2024 (16:44 IST)
கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் உறியடி. இந்த படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்த விஜய் குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதையடுத்து அவர் இயக்கிய படம்  "உறியடி 2". இதனை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்தார். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது விஜயகுமார் அடுத்து சேத்துமான் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. கிராமத்து பின்னணியில் அரசியல் கதையாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

வரும் மே 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலை மையமாகக் கொண்டு படம் உருவாகி உள்ளதை இந்த டிரைலர் காட்டுகிறது. எதிர்பாராத விதமாக தேர்தலில் நிற்கும் விஜய்குமார் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே எலக்‌ஷன் படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments