பிரபல நடிகை உபேர் டாக்சியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஓட்டிநரின் செயலால் பாதிக்கப்பட்டதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் லண்டனுக்கு சென்றுள்ளார். அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், உபேர் டாக்சியில் நான் பயணம் செய்தபோது, ஓட்டுநர் திடீரென்று கூச்சலிட்டுக் கொண்டு வாகனத்தை இயக்கினார். ஓட்டுநரின் இந்த செயலால் நான் கண்கலங்கியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், லண்டனுக்குச் சென்றால் பொதுவான போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.
சோனம் கபூரின் இந்த டுவீட்டுக்கு உபேர் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளது.