சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் குஷ்பூ மீனா நயன்தாரா கீர்த்தி சுரேஷ் பிரகாஷ்ராஜ் சூரி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அண்ணாத்த படத்தில் ஜெகபதி பாபு இணைந்துள்ளார் என்று அறிவித்தது. பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த ஜகபதி பாபு இப்படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோரின் பாடல் காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் இப்பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துவரும் நடிகர் ஜார்ஜ் மரியான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் @rajinikanth
ஐயாவின் நகைச்சுவை உங்கள் அனைவரையும் அவரது பொன்னான நாட்கள் படங்களுக்குச் செல்லச் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு ஒரு ரசிகர், நல்ல செய்தி.பழைய தம்பிக்கு எந்த ஊரு , தில்லு முல்லு ரஜினியைக் கண்டால் நல்லதே எனத் தெரிவித்துள்ளார்.