Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தரையில் கால் படாமல் நடனம் ஆடிய எஸ்டிஆர்: AAA அப்டேட்!!

தரையில் கால் படாமல் நடனம் ஆடிய எஸ்டிஆர்: AAA அப்டேட்!!
, புதன், 14 ஜூன் 2017 (11:20 IST)
சிம்பு தற்போது ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.


 
 
இந்த படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடிக்கிறார். மேலும், ப்டம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சானாகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
 
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் வைரமுத்து ‘இரத்தமே ரத்தம்’ என துவங்கும் பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார்.
 
இது முழுக்க முழுக்க சிம்பு ரசிகர்களை மையப்படுத்திய பாடல். இப்படத்தின் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. தற்போது இந்த பாடல் பற்றிய புது அப்டேட் கிடைத்துள்ளது.
 
இந்த பாடலில் சிம்புவின் கால் தரையில் படாத அளவுக்கு அவரது ரசிகர்கள் தோளிலேயே நின்று ஆடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. 
 
ரம்ஜான் தினத்தையொட்டி படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா பிரச்சினைகளை ரஜினியால் மட்டும்தான் தீர்த்து வைக்க முடியும்: தயாரிப்பாளர் டி.சிவா பேச்சு!