Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவ்வளவு காட்சிகளை நீக்கியும் இவ்வளவு நீளமா? 3 மணி நேரத்துக்கு இதுதான் காரணமாம்!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (17:00 IST)
மாஸ்டர் படத்தின் நீளம் 3 மணிநேரம் இருப்பது குறித்து ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை நேற்று படக்குழுவினர் உறுதி செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரன்னிங் டைம் 180 நிமிடங்கள் என்ற செய்தி வெளியானது. அப்படியென்றால் இடைவேளை எல்லாம் சேர்ந்து மொத்தம் ஒரு காட்சிக்கு 3. 5 மணிநேரம் ஆகும். அதனால் சிறப்புக் காட்சிகள் திரையிடுவதில் சிக்கல்கள் எழும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் இவ்வளவு நேரம் அயர்ச்சியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நீளம் குறித்து மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் எடுத்த பலக் காட்சிகள் ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டதாம். அப்படிப் பார்த்தாலுமே நீளத்தை இதற்கு மேல் குறைக்க முடியவில்லை என்பதால்தான் இவ்வளவு நீளத்துடன் படத்தை ரிலிஸ் செய்கிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments