Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நாளே வெளியேறும் போட்டியாளர்.. அதிரடி ஆரம்பம்..!

Siva
திங்கள், 7 அக்டோபர் 2024 (07:24 IST)
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தொடங்கிய நிலையில், 18 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் என்பதும், முதல் நாளே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தங்கும் இடம் குறித்த பிரச்சனை பரபரப்பாக ஓடியது என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, ஒவ்வொரு வாரமும் சிலர் நாமினேஷன் செய்யப்பட்டு, அவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்ற நிலையில், பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக முதல் நாளே ஒருவர் வெளியேற்றப்பட இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, முதல் வார முடிவில் வெளியேற்றம் நடத்துவது வழக்கம். ஆனால், அறிமுகம் செய்த அடுத்த நாளே எலிமினேஷன் என்பது பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அடுத்த நாளே யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அநேகமாக மகாராஜா திரைப்படத்தில் நடித்த சாச்சனா தான் வெளியேற்றப்படுகிறார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்."


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments