Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

இயக்குநர் ஜனநாதனுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

Advertiesment
எஸ்பி ஜனநாதன்
, ஞாயிறு, 14 மார்ச் 2021 (17:30 IST)
பிரபல இயக்குனர் எஸ் பி ஜனநாதன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென மயங்கி விழுந்த எஸ்பி ஜனநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். இதனையடுத்து திரையுலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:
 
இயக்குநர் S.P.ஜனநாதன் சாரின் திடீர் மரணம் வேதனையளிக்கிறது. பொதுவுடைமை கொள்கை சார்ந்த சினிமாவை எளிய மக்களுக்கு புரியும்படி எடுத்து, வணிக ரீதியாக வெல்ல வைக்க முடியுமென நிரூபித்தவர் ஜனநாதன் சார். அவரின் மறைவு திரையுலகிற்கும்-மாற்று சினிமாவை நேசிப்போருக்கும் பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முற்போக்கு சிவப்பு அழிந்துவிட்டது என்பேனா? – எஸ்.பி.ஜனநாதன் குறித்து வைரமுத்து ட்வீட்!