விஷால், ஜெயம் ரவியுடன் மோதும் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (19:42 IST)
விஷால், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படங்கள் ஒரே தேதியில் ரிலீஸாக இருக்கின்றன.

 
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘நிமிர்’. மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தில் நமிதா பிரமோத், பார்வதி நாயர், மகேந்திரன், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
தர்புகா சிவா, அஜ்னீஸ் லோக்நாத் இருவரும் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். சந்தோஷ் டி குருவில்லா தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தை, ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
 
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, விஷாலின் ‘இரும்புத்திரை’, அனுஷ்காவின் ‘பாகமதி’ ஆகிய படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. அந்த பட்டியலில் தற்போது உதயநிதி ஸ்டாலினும் இடம்பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி அறிவிப்பு.. எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

நாங்க எப்பவும் ஃபிரண்டுதான்!.. குஷ்புவுடன் கமல்ஹாசன்!. வைரல் போட்டோஸ்!..

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments