Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்ட்டிகிள் 15 ரீமேக்… படப்பிடிப்பில் கலந்துகொண்ட உதயநிதி!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:00 IST)
நடிகர் உதயநிதி தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்த நிலையில் இப்போது திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவர் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இப்போது இன்றோடு தேர்தல் முடிய உள்ள நிலையில் இனி அவர் தன் திரைப்படங்களில் கவனம் செலுத்த உள்ளார்.

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments