Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மயில்சாமியின் பிறந்தநாளைக் கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (09:40 IST)
நடிகர் மயில்சாமி இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இயக்குனர் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் மயில்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். மேலும் படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினர் அனைவருக்கும் அன்று பிரியாணி வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments