ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படமான பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் இந்த படம் சிலபல காரணங்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை.
இந்நிலையில் இப்போது கைவிடப்பட்ட ஸ்டார் படத்தை டாடா புகழ் கவின் நடிப்பில் மீண்டும் தொடங்குகிறாராம் இளன். இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி 10 நாட்கள் நடந்துள்ள நிலையில் படத்தின் ஹீரோயின் ஒப்பந்தம் ஆகவில்லை. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க லவ்டுடே இவானா மற்றும் பேச்சிலர் திவ்யபாரதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இருவரில் யாராவது ஒருவர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.