கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் முழுவதும் முடங்கியுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகளும் முடங்கியுள்ளன. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறாததால் அடுத்த எபிசோடுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் டிவி சேனல்கள் குழப்பத்தில் உள்ளன. 1990களில் இருந்து செயல்பட்டு வரும் டிவி சேனல்கள் தங்களது புதிய சீரியல்களில் ஹூட்டிங்க் தடைப்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் பழைய டிவி சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளன.
புதிதாக வந்த டிவி சேனல்கள் தாங்கள் தற்போது ஒளிபரப்பி வரும் சீரியல்களை மீண்டும் முதல் எபிஸோடிலிருந்து ஒளிபரப்ப தொடங்கியுள்ளன. இந்நிலையில் வீட்டில் உள்ள பலர் தங்களது 90களின் ஆதர்ச சின்னத்திரை நாடகங்களில் சிலவற்றை குறிப்பிட்டு அவற்றை மறு ஒளிபரப்பு செய்யவும் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.