Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

Advertiesment
டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

vinoth

, திங்கள், 1 ஜூலை 2024 (08:44 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைதும் செய்யப்பட்டார்.

ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் வாசனின் கைது நடவடிக்கைகளால் என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை.

இந்நிலையில் மஞ்சள் வீரன் படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகராத நிலையில், இப்போது IPL என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் அவரோடு நடிகர் கிஷோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ராதா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தை கருணாகரன் இயக்குகிறார். படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!