Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

GOAT படத்தில் திரிஷாவின் பாத்திரம் என்ன? வெளியான தகவல்!

GOAT படத்தில் திரிஷாவின் பாத்திரம் என்ன? வெளியான தகவல்!

vinoth

, வெள்ளி, 15 மார்ச் 2024 (11:08 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு முக்கியமானக் காட்சிகளை படமாக்க கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு விரைவில் செல்ல உள்ளதாம்.

இந்நிலையில் கோட் படத்தில் நடிகை திரிஷாவும் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இது விஜய் த்ரிஷா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது. இந்நிலையில் த்ரிஷா ஒரு கௌர வேடத்தில் மட்டுமே நடித்துள்ளதாகவும், அவர் விஜய்யோடு இணைந்து ஒரு பெப்பியான குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடியில் ரிலீஸ் ஆனது மம்மூட்டியின் ப்ரமயுகம்..!