Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரிஷா நடிக்கும் படங்களுக்கு தடை விதிக்க ஆலோசனை!

திரிஷா நடிக்கும் படங்களுக்கு தடை விதிக்க ஆலோசனை!
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:13 IST)
நடிகை த்ரிஷா தான் நடித்துள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொள்ள மாட்டேன் எனக் கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய ’பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஆண்டு பிப்ரவரி 28 என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் புரமோஷன் விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸும் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வருடத்துக்கும் மேலாக படம் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது.

இந்நிலையில் படத்தைத் தயாரித்த 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை ஓடிடி வெளியீடாகக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் படத்தின் நாயகியான திரிஷா நடிக்க மறுத்து வருகிறாராம். இது சம்மந்தமாக நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் த்ரிஷா நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தடை விதிக்கும் ஆலோசனையில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ணன் வெளியீடு… 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி – தியேட்டர்களுக்கு அபராதம்!