நடிகை த்ரிஷா தற்போது தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க்ம் தளபதி 67 திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் 16 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தளபதி 67 திரைப்படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் ஆனால் அவர் வில்லி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தளபதி67 படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும், சில தயாரிப்பாளர்கள் திரிஷாவை தங்கள் படத்துக்கு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் விஜய் படத்தில் நடித்தால் தனது மார்க்கெட் எகிறும் என்பதால் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு ஏற்றிக் கூறி வருகிறாராம் திரிஷா. ஒரே தகவலால் திரிஷாவுக்கு சம்பள விஷயத்தில் ஜாக்பாட் அடித்துள்ளது.