முன்னணி நடிகைகளான திரிஷா மற்றும் நயன்தாரா சினிமா உலகில் வழக்கமான பாணியில் இருந்து சற்று வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
முதிர் கன்னிகளாகி விட்டதால் இருவருமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து உள்ளனர்.
நயன்தாரா தற்போது நடித்து வரும் டோரா, அறம், இமைக்கா நொடிகள் ஆகிய மூன்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்கள்.
இதேபோல் திரிஷா நடிக்கும் மோகினி, போகி ஆகிய 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். திரிஷா தற்போது நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.