Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் #Meherezylaa பாடல் இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (16:05 IST)
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் சிங்கிள் பாடலின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இதனை அடுத்து சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவு ஆகியவை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில் #Meherezylaa என்ற பாடலின் டீசரை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் இப்பாடல் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது யூ1 ரெக்கார்ட்ஸ்  என்ற யூடியுப் பக்கத்தில் வெளியாகியுள்ள இப்பாடலை   யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.  இப்பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். மாநாடு படத்தின் பாடல் வெளியாகியுள்ளாதால் சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே #Meherezylaa பாடல் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments