Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

Mahendran
வெள்ளி, 23 மே 2025 (18:24 IST)
தமிழ் திரை உலகில் ரூ.300 கோடி, ரூ.500 கோடி என பட்ஜெட்டில் படம் எடுத்து, தலையில் துண்டை போட்டுக்கொண்டு செல்லும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், வெறும் ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரூ.75 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து, ஷங்கர் போன்ற பிரம்மாண்டமான படங்களை இயக்கும் இயக்குநர்கள், 'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவினரிடம் பாடம் படிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியானது. இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதே தேதியில் வெளியான சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், 'டூரிஸ்ட் பேமிலி' படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வெற்றி என்றால் உண்மையான வெற்றி இதுதான் என்றும், பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் இந்த படக்குழுவினரிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
பிரம்மாண்டமான காட்சி, மாஸ் நடிகர்கள் ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் அல்ல. நல்ல கதை அம்சம் இருந்தால்தான் ஒரு படம் வெற்றி பெறும் என்பதை மீண்டும் 'டூரிஸ்ட் பேமிலி' படம் நிரூபித்துள்ளது.
 
இனிமேலாவது இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும், பிரம்மாண்டத்திற்கு பதிலாக கதைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments