Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

Siva
திங்கள், 23 ஜூன் 2025 (15:43 IST)
செஃப் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கேற்கும், 'டாப் குக்கு டூப் குக்கு' சமையல் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் பங்குபெறும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ், 'மீடியா மேசன்ஸ்' நிறுவனமும் சன் தொலைக்காட்சியும் இணைந்து தயாரிக்கும் 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியின் நடுவராக பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 'டாப் குக்கு டூப் குக்கு - 2' சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
 
'டூப் குக்கு'களாக விஜய் டிவி மூலம் பிரபலமான பரத், தீனா, தீபா, மோனிஷா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முதல் சீசனில் பங்கேற்றனர். இரண்டாம் சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு முடிந்துவிட்டதாகவும், டாப் குக்குகள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
 
அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொகுப்பாளரும் நடிகருமான தீபக், 'சுந்தரி' தொடர் நாயகி கேப்ரியல்லா, 'இனியா' தொடர் பிரபலம் ஆல்யா மானசா, 'ஆனந்த ராகம்' தொடர் நடிகர் அழகப்பன், அனுஷா பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது, விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் சீசன் 6 ஒளிபரப்பாகி வரும் நிலையில், 'டாப் குக்கு டூப் குக்கு - 2' நிகழ்ச்சி அதற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிட் காலத்தில் மக்களைப் புத்துணர்ச்சியோடு வைத்திருந்தவை இவையிரண்டும்தான் – அஜித் குமார் கருத்து!

விஜய் சேதுபதி& பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் டைட்டில் ‘Slum dog’ஆ?... வெளியான தகவல்!

அடுத்த ஆயிரம் கோடி வசூல் படமா ‘காந்தாரா 1’.. முதல் நாளில் பிரம்மாண்ட வசூல்!

காந்தாரா -1 அலைக்கு நடுவிலும் தாக்குப் பிடிக்கும் தனுஷின் ‘இட்லி கடை’… இரண்டாம் நாள் வசூல் நிலவரம்!

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments