ஹாட்ஸ்டாரில் ஹார்ட் பீட் என்ற வெப் தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது என்பதும், இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்கள், தாய் மற்றும் மகள் இடையே நடக்கும் போராட்டம், தந்தை மற்றும் மகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம், இதனிடையே ஒரு காதல் சம்பவம் என இந்த தொடர் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை ஜியோ ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் இந்த தொடரை டெலிட் பாக்டரி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாகவும், இந்த தொடரின் ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.