Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2018ம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 5 நடிகர்கள்

Advertiesment
2018ம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 5 நடிகர்கள்
, சனி, 29 டிசம்பர் 2018 (14:35 IST)
டுவிட்டரில் இந்த 2018ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட நடிகர்கள் யார் என்ற விவரத்தை ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. 
 



தென்னிந்தியாவில் டாப் நடிகர்கள் யார் என்பது குறித்த இந்த பட்டியலை இப்போது பார்ப்போம்.
 
1 பவன் கல்யாண்
 
 அரசியலில் இறங்கிவிட்ட  நடிகர் பவன் கல்யாண்,  சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள், அரசியல் நகர்வுகள், பொது பிரச்னைகள் தொடர்பாக டுவிட்டரில் அதிகம் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த கருத்துக்களால் டுவிட்டரில் பேசப்படும் டாப் தென்னிந்திய நடிகராக பவன் கல்யாண் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 3வது இடத்தை பிடித்திருந்தார்.
 
2.  விஜய்
 
 தளபதி விஜய் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு  சர்கார் ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சை மற்றும் சர்கார் பட சர்ச்சை காரணமாக டுவிட்டரில் அதிக முறை டாப் டிரெண்டிங்கில் விஜய் வலம் வந்தார். இதனால் இந்த ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
3 மகேஷ் பாபு
 
மகரிஸி படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு தனது படங்கள் தொடர்பாக அடிக்கடி அப்பேட் கொடுத்து வந்தார். இதனை டுவிட்டரில் ரசிகர்கள் தங்கள் பக்கங்கள் ஷேர் செய்தனர். இதனால் கடந்த முறை 5வது இடத்தில் இருந்த மகேஷ் பாபு இந்த முறை  3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
 
4 ஜுனியர் என்டிஆர்
 
 டோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவரான ஜுனியர் என்டிஆர், அரவிந்தா சமிதா வீர ராகவா படத்தை அதிகம் விளம்பரம் செய்ததால் டாப் 5 இடங்களில் ஒரு இடத்தை பிடித்துள்ளார். 
 
5 சூர்யா
 
கடந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்த சூர்யா. இந்த முறை 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கேரள வெள்ளத்தின் போது இவரது ரசிகர்கள் அதிகம் உதவியது, என்ஜிகே படம் குறித்த அப்டேட் உள்ளிட்ட காரணங்களால் சூர்யா டாப் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018ம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 5 நடிகைகள்