விஜய் நடித்த படங்களில், தனக்குப் பிடித்த டாப் 3 படங்களைப் பட்டியலிட்டுள்ளார் அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகர். விஜய் இதுவரை நடித்த 60 படங்களுமே ஒவ்வொரு வகையில் அவருக்குப் பிடித்தாலும், இந்தப் படங்கள் ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார்.
டாப் 1: பூவே உனக்காக
விக்ரமன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான படம். விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக நடித்துவந்த விஜய், ட்ரெண்ட் மாறி நடித்தார். அந்தப் படத்தின் மூலம் ஏகப்பட்ட ஃபேமிலி ஆடியன்ஸைப் பெற்ற விஜய்க்கு, சினிமா வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட படம் இது. படம் ரிலீஸான சமயத்தில், கமலா தியேட்டரில் 21 முறை பார்த்து ரசித்தாராம் ஷோபா சந்திரசேகர். விஜய்யின் அம்மா என்பதால், அவரிடம் டிக்கெட் கேட்க மாட்டார்களாம். அப்போதே 275 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
டாப் 2: குஷி
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளியான படம். விஜய் – ஜோதிகா ஜோடியாக நடித்த இந்தப் படத்துக்கு, தேவா இசையமைத்திருந்தார். ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தைத் தயாரித்தார். விஜய்யையும், ஜோதிகாவையும் எஸ்.ஜே.சூர்யா ஹேண்டில் பண்ணிய விதம் ஷோபாவுக்குப் பிடிக்குமாம். ஒளிப்பதிவும், பாடல்களும் அவரைக் கவர்ந்தவை. இப்போது கூட டி.வி.யில் இந்தப் படத்தைப் போட்டால், முழுப்படத்தையும் பார்த்துவிட்டுத்தான் மறுவேலையாம்.
டாப் 3: துப்பாக்கி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம். விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யுத் ஜம்வால் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்தப் படத்தை, கலைப்புலி எஸ். தாணு தயாரித்தார். இந்தப் படத்தை, 50 முறைக்கு மேல் பார்த்துள்ளாராம். விஜய் நடித்த லேட்டஸ்ட் படங்களிலேயே, இதுதான் அல்ட்டிமேட்டாம்.