ரஜினி, அஜித், விஜய் படங்கள் என்றால், படம் அறிவித்த நாளிலிருந்து படம் குறித்த வதந்திகள் கிளப்பிவிடப்படும். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. விசாரித்தால் அப்படி எந்த ஐடியாவும் அட்லிக்கு இல்லையாம்.
வதந்தி என்றே தெரிந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்பதால் அவற்றை சொல்லாமலும் தவிர்க்க முடியாது. இதோ
வதந்தி நெம்பர் 2.
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுக்கு வில்லனாக நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யா விஜய் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக சில தினங்களாக வதந்தி நிலவுகிறது. இது வதந்தியா இல்லை வருங்கால பிரேக்கிங் நியூசா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.