Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன்!

தனுஷுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன்!
, புதன், 2 நவம்பர் 2016 (12:20 IST)
கணவரை பிரிந்து வாழும் சௌந்தர்யா படம் இயக்குவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் இயக்கப் போகும் புதிய படத்துக்கு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அந்தப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இரண்டு ஹீரோயின்கள் அவருடன் ஜோடி சேர உள்ளனர்.
 
இம்மாதம் தொடங்கவுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பில் மூன்றாவதாக ஒரு ஹீரோயின் இந்தப்படத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக பாலிவுட் நடிகை சோனம் கபூருடன் படக்குழுவினர் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தனுஷூம், சோனம் கபூரும் ஏற்கனவே ரான்ஜனா எனும் ஹிந்தி படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது ஹீரோயின் சோனம் கபூர் தான் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடம்பனில் யானைகளுக்கு மத்தியில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!!