தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபோது சினிமா டிக்கெட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரியும், மாநில அரசு சார்பில் 30% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் வேல்லைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி கடந்த 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கேளிக்கை வரி 20% சதவீதம் குறைக்கப்பட்டு 10% விதிக்கப்பட்டுள்ளது. இந்த கேளிக்கை வரி அமலுக்கு வந்ததால் சினிமா டிக்கெட் கட்டணத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சினிமா டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.50 அதிகபட்சக் கட்டணம் ரூ.160 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையை தவிர மற்ற இடங்களில் உள்ள திரையரங்குகளில் ரூ.140 வரை கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.