விஜய் கட்சி தொடங்குவது குறித்து தமிழக முதல்வர் கருத்து!
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் அவரது விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த சில மணி நேரங்களாக சமூக ஊடகங்களில் வதந்திகள் கிளம்பி வருகிறது 
 
									
										
			        							
								
																	
	 
	இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் விஜய் அரசியல் கட்சி எதையும் இப்போதைக்கு ஆரம்பிக்கவில்லை என்றும் அவரது பிஆர்ஓ விளக்கம் அளித்துள்ளார் 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கருத்து கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை என்றும் இந்தியா ஜனநாயக நாடு என்றும் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றும் கூறினார். நடிகர் விஜயின் ஆரம்பிக்க இருக்கும் கட்சி குறித்து முதல்வரின் இந்த கருத்தால் பரபரப்பு ஏர்பட்டுள்ளது. 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	இந்த நிலையில் கமல் கட்சிக்கு நடிகர் விஜய் ஆதரவளிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் இரு தரப்பினர்களால் உறுதி செய்யப்படவில்லை