Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட்பிரபு படத்துக்கு வந்த தலைப்புப் பிரச்சனை!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (15:56 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு அசோக் செல்வனைக் கதாநாயகனாக வைத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.      

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியானது. மன்மதலீலை என்ற தலைப்பில் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் பாலசந்தர் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் வெங்கட்பிரபுவின் படத்துக்கு மன்மத லீலை என்று தலைப்பு வைக்கக்கூடாது என பாலச்சந்தர் ரசிகர் மன்றத்தின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரசிகர் மன்றத்தின் தலைவராக இருப்பவர் நடிகர் ராஜேஷ் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வெங்கட்பிரபு தரப்போ முறைப்படி பாலச்சந்தரின் வாரிசுகளிடம் தலைப்புக்கான் உரிமையை வாங்கிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் வேலை இனிமேல்தான் ஆரம்பம்… கல்கி படம் பார்த்த கமல் பேச்சு!

இந்தியன், முதல்வன் & சிவாஜி ஆகிய மூன்று பேரும் ஒரே படத்தி… ஷங்கர் போட்ட திட்டம்!

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments