Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 ஆண்டுகளை நிறைவு செய்த டைட்டானிக்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Advertiesment
25 ஆண்டுகளை நிறைவு செய்த டைட்டானிக்… ரசிகர்கள் கொண்டாட்டம்!
, செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:31 IST)
டைட்டானிக் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் பலரும் அதைக் கொண்டாடி வருகின்றனர்.

உலக சினிமாவில் எவர்க்ரீன் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று ‘டைட்டானிக்’ 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்த இந்த திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது.

அதன் பின்னர் வந்த அவதார் மற்றும் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட இரு படங்கள் மட்டுமே டைட்டானிக் வசூல் சாதனையை முறியடித்தன. இந்நிலையில் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் புதிய தரத்தில் ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவதார் 2 ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இப்போது டைட்டானிக் திரைப்படம் 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதைக் குறிப்பிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் டைட்டானிக் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநெல்வேலியில் நெப்போலியன் கட்டியுள்ள மிகப்பெரிய மருத்துவமனை!