Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுடியூப் ரிவ்யூவர்களைத் தியேட்டர்களுக்குள் விடாதீர்கள்… திருப்பூர் சுப்ரமணியன் ஆவேசம்!

யுடியூப் ரிவ்யூவர்களைத் தியேட்டர்களுக்குள் விடாதீர்கள்… திருப்பூர் சுப்ரமணியன் ஆவேசம்!

vinoth

, செவ்வாய், 19 நவம்பர் 2024 (09:06 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம்  கடந்தவாரம் உலகம் முழுவதும் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறது.

இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமானக் காரணமாக ஒன்றை சொல்லலாம். படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தைப் பற்றி படக்குழுவினர் கொடுத்த ஓவர் பில்டப்தான் அது. செல்லும் மேடைகளில் எல்லாம் அவர்கள் ஆற்றிய புகழுரைகள் ரசிகர்களுக்கு திகட்டுமளவுக்கு அமைந்தது.

கங்குவா படத்தின் தோல்விக்கு சோஷியல் மீடியாவில் கிளம்பிய ஒட்டுமொத்த நெகட்டிவ் விமர்சனங்களும் ஒரு முக்கியக் காரணம். இதில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட வெறுப்புப் பிரச்சாரங்களும் அடக்கம்தான். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பேசும்போது “தியேட்டர்களுக்கு யுடியூப் ரிவ்யூவர்களை நாமே அனுமதிப்பது நமது தொழிலை நாமே கெடுத்துக் கொள்வது போலதான். அவர்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்காதீர்கள். இரண்டு வாரங்களுக்கு எந்த படத்தின் விமர்சனங்களும் வரக்கூடாது” என சட்டம் கொண்டு வாருங்கள் என பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்க்கிங் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா விக்ரம்?