Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘டிக் டிக் டிக்’ - முன்னோட்டம்

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (13:19 IST)
ஜெயம் ரவி நடிப்பில் நாளை ரிலீஸாக இருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’.

 
‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் - ஜெயம் ரவி இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படம், ‘இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்’ என்று கூறப்படுகிறது. ஹிந்தியில் கூட இந்த முயற்சியை யாரும் செய்தது இல்லை என்று கூறப்படுகிறது.
 
ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த நடிகர் ஆரோன் ஆசிஸ், வில்லனாக நடித்துள்ளார். ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயப்பிரகாஷ், பாலாஜி வேணுகோபால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜெயம் ரவியின் மகன் ஆரவ், படத்திலும் ஜெயம் ரவிக்கு மகனாகவே நடித்துள்ளார்.
 
டி.இமான் இசையில் 5 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. 4 பாடல்களை மதன் கார்க்கி எழுத, ஒரு பாடலை டி.இமானே எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா, யோகி பி, சுனிதா சாரதி, சித் ஸ்ரீராம், ரஞ்சித், ஸ்ரீராஸ்கல், மிர்துளா சிவா ஆகியோர் பாடியுள்ளனர். அப்பா - மகன் இடையிலான உறவின் உன்னதத்தைச் சொல்லும் ‘குறும்பாய்’ பாடல் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளது.
 
எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிரதீப் இ ராகவ் எடிட் செய்துள்ளார். ஹிதேஷ் ஜெபக் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. கடந்த மார்ச் மாதமே வெளியாக வேண்டிய இந்தப் படம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தால் நாளை ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments