Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அபிராமி மெஹா மாலில் இன்று முதல் டிக்கெட் விலை குறைப்பு

Advertiesment
Abirami Meha mall
, வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (14:44 IST)
சென்னையில் அமைந்துள்ள அபிராமி மெஹா மால் தியேட்டர்களில், இன்று முதல் டிக்கெட் விலை குறைக்கப்படுகிறது.

 
சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ளது அபிராமி மெஹா மால். இந்த மாலில் 4 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் தற்போது டிக்கெட் விலை 140 மற்றும் 160 ரூபாயாக உள்ளது. இந்த விலை, 101 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜி.எஸ்.டி. மற்றும் உள்ளூர் கேளிக்கை வரியையும் சேர்த்து.
 
இந்த விலை குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார் அபிராமி ராமநாதன். மார்ச் 31ஆம் தேதி வரை இந்த விலை குறைப்பு நடைமுறையில் இருக்கும். அதன்பிறகு பழைய விலைக்கு மாறிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு ; எலுமினேஷன் உண்டா? - கஸ்தூரி நக்கல்