Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'துப்பறிவாளன்' முதல் நாள் வரவேற்பு எப்படி?

'துப்பறிவாளன்' முதல் நாள் வரவேற்பு எப்படி?
, வியாழன், 14 செப்டம்பர் 2017 (23:01 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள 'துப்பறிவாளன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் அதில் பாசிட்டிவ் விமர்சனங்களின் விகிதம் சற்று அதிகம் தான் என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது



 
 
மிஷ்கின் இயக்கம், இசை, விஷால் நடிப்பு, திரைக்கதை ஆகியவை இந்த படத்தின் பிளஸ் என்றும் படத்தின் நீளம், மெதுவாக நகரும் காட்சிகள், புரியாத ஒருசில காட்சிகள் ஆகியவை இந்த படத்தின் குறையாகவும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் முதல் நாளில் இந்த படத்திற்கு சராசரியான வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வார இறுதி வசூலுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை வெளியாகவுள்ள 'மகளிர் மட்டும்' தரும் போட்டி மற்றும் ஆன்லைன் பைரஸி ஆகியவை இந்த படத்தின் வசூலுக்கு எதிரியாக உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா? அதுவும் அவருடன்....