Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாரியில் இருந்து கீழே விழுந்து விபத்து…. துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் பலி!

லாரியில் இருந்து கீழே விழுந்து விபத்து…. துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் பலி!
, புதன், 11 ஜனவரி 2023 (09:24 IST)
சென்னை ரோகினி திரையரங்கு அருகே இந்த சோகமான சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை அளித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் துணிவு திரைப்படம் ஓடும் திரைகளில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி கொண்டாடி மகிழ்ந்து படத்தைப் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்குக்கு துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் வெளியே நின்ற லாரியில் ஏறி நடனமாடிய போது தவறி விழுந்து முதுகுத் தண்டில் பலத்த அடியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இப்போது அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது சமூகவலைதளங்களில் பரவி சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர்கள்; அஜித் பேனரை கிழித்து பழிவாங்கிய விஜய் ரசிகர்கள்!