5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

Siva
ஞாயிறு, 8 ஜூன் 2025 (18:13 IST)
திரைத்துறையின் தலைசிறந்த பிரமுகர்களான கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஏ.ஆர். ரகுமான் மற்றும் மணிரத்னம் உள்ளிட்ட ஐவர் ஒரே படத்தில் களமிறங்கினால், அது சாதாரண நிகழ்வாக இருக்க முடியாது. அந்த வகையில் ‘தக்லைஃப்’ என்ற திரைப்படம் துவக்கம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை உருவாக்கியது.
 
இந்த எதிர்பார்ப்பை வளர்க்கும் விதமாக, இந்தியாவிலும் உலகம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. இத்தனை வரவேற்புக்கு பிறகு, படம் வெளியாகும் நாளான ஜூன் 5ஆம் தேதி, ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கிய முதல் காட்சி முடிந்தவுடன் ஏற்பட்ட விமர்சனங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
 
முதல்நாளில் படம் வெறும் 17 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பிறகு, வியாழன் முதல் சனி வரை மூன்று நாட்களில் மொத்தம் 30 கோடி ரூபாய்தான் வசூலாகியுள்ளது என திரை வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மொத்தமாக 180 கோடி ரூபாய் செலவில் உருவான ‘தக்லைஃப்’, இவ்வளவு குறைந்த வருவாயால் தயாரிப்பாளர்களுக்கு கடும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியிருக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்...

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments