Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக கிராமத்தில் நடக்கும் த்ரில்லர் சிரிஸ்! – தி வில்லேஜ் வெப் சிரிஸ் விரைவில்!

Advertiesment
The Village
, வியாழன், 9 நவம்பர் 2023 (16:01 IST)
பிரைம் வீடியோ தனது அடுத்த உலகளவிலான ப்ரீமியர் வெளியீடாக தமிழ் ஒரிஜினல் திகில், தொடரான  தி வில்லேஜ் திரைப்படம்  நவம்பர் 24 அன்று வெளியிடப்படுவதை அறிவித்தது ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில்பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்கத்தில்  தி வில்லேஜ் படம் உருவாகியிருக்கிறது


 
இந்தத் தொடரில் புகழ் பெற்ற தமிழ் நடிகரான ஆர்யா, மிகச்சிறந்த திறமை வாய்ந்த நட்சத்திரங்களான திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் உட்பட  பல்வேறு நடிகர்களுடன்  இணைந்து நடித்துள்ளார்.

மிலிந்த் ராவ்  இயக்கத்தில் உருவான , தி வில்லேஜ், தொடக்கத்தில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, முதலில் யாலி ட்ரீம் ஒர்க்ஸால் அதே பெயரில், பிரசுரிக்கப்பட்ட கிராஃபிக் திகில் நாவலால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு திகில் தொடராகும், தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு  காப்பாற்றுவதற்காக ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

மிலிந்த் ராவ், தீராஜ் வைத்தி, மற்றும் தீப்தி கோவிந்தராஜன்  ஆகியோரின் எழுத்தில் உருவான இந்தத் தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பி.எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

இந்தத் தொடரில், புகழ்பெற்ற பிரபல தமிழ் நடிகர் ஆர்யா  கதாநாயகனாகத் தோன்ற அவருடன் இணைந்து , திவ்யாபிள்ளை அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான் , PN சன்னி, முத்துக்குமார் கே.  கலைராணி எஸ்.எஸ், ஜான் கொக்கன் பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜூன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் போன்ற பல்வேறு திறமை வாய்ந்த நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்தத் தொடர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நவம்பர் 24 அன்று தமிழில் வெளியிடப்படுவதோடு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் சப்டைட்டில்களுடன் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.

ஒரு கிராஃபிக் நாவலில் இருந்து பெற்ற மன எழுச்சியின் வழியாக , இந்திய திரைப்பட வரலாற்றில் திகிலூட்டும்  பொழுதுபோக்கு படவரிசையில்  இதுவரை கண்டறியப்படாத ஒரு தனித்துவமான கதைக்களத்தை இந்தத் தொடர் அறிமுகப்படுத்தி வழங்குகிறது.

மிலிந்த் மிக அற்புதமான முறையில் பிரமிக்கத்தக்க வகையில் தனது பார்வைக்கு உயிரூட்டியிருப்பது மிலிந்த் இது நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் தலை சிறந்த நடிப்பாற்றலின் மூலம்  தெளிவாகத் தெரிகிறது.

இந்த தி வில்லேஜ் திரைப்படம் மனதை  விட்டு அகலாத அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க உத்திரவாதமளித்து, சஸ்பென்ஸ், அமானுஷ்யமான மயிர்க்கூச்செறியும் நிகழ்வுகள் நிறைந்த காட்சி பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்கி கட்டாயம் காணவேண்டிய வகையில் உணர்ச்சி பூர்வமான ஒரு குடும்பக் கதையை  வழங்குகிறது.”

"எங்கள் கடுமையான உழைப்பில்  அன்பின் வெளிப்பாடான தி வில்லேஜ் ஐ உலகளாவிய பார்வையாளர்களிடம் பிரைம் வீடியோவுடனான கூட்டாண்மையோடு கொண்டு செல்வது எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி அளிக்கிறது." என்று  கிரியேட்டிவ் தயாரிப்பாளரும் இயக்குநருமான மிலிந்த் ராவ் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது  "ஒரு நல்ல திகில் தொடர் அல்லது திரைப்படம் என்பது இரவில் தனியாக வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணமே உங்களை அச்சுறுத்துவதாகவும்,ஒரு மரக்க்குச்சி உடையும்  சத்தம் கூட  உங்கள் இதயத்துடிப்பை ஒரு கணம் நிறுத்தி, உங்களைச் சுற்றி நிழலுருவங்கள் உயிரெழுந்து வருவது போல தோற்றமளிக்கச்செய்ய  வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்த பிரிவு வகை திரைப்படங்களை அனுபவித்து  ரசிப்பவர்களுக்கு அடிவயிற்றைக் கலக்கும் வகையில் அச்சத்தை உருவாக்கும் உள்ளடக்கத்தை கொண்டுவர  நான் விரும்புகிறேன். நாங்கள்   ஒவ்வொருவரும்-நடிகர்கள்  குழுவினர் தி வில்லேஜ் மூலம், திகில் படங்களின் ஆர்வலர்கள்  மட்டுமின்றி, அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் மேம்பட்ட திரைப்படக் கலையம்சத்தை விரும்பி  அனைவரும் ரசிக்கக்கூடியவகையிலான  ஒரு திரைப்படத்தை -வழங்க முடிந்தது  என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“முழுப்படத்திலும் கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது சவாலாக இருந்தது” ; ஜப்பான் படம் குறித்து மனம் திறந்த கார்த்தி