Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தியாகம் செய்வோம் வா. ஜிவி பிரகாஷின் உணர்ச்சிமிகு பாடல் வரிகள்

Advertiesment
, வெள்ளி, 10 மார்ச் 2017 (22:23 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஜி.வி.பிரகாஷ்-அருண்காமராஜின் கூட்டணியில் உருவான 'கொம்பு வச்ச சிங்கமடா' பாடல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது நெடுவாசல் பிரச்சனை குறித்து அதே கூட்டணி ஒரு பாடலை இயற்றி இசையமைத்துள்ளது. தியாகம் செய்வோம் வா என்று தொடங்கும் இந்த உணர்ச்சி மிகுந்த பாடலின் வரிகள் இதோ



 



தியாகம்செய்வோம்வா

உறங்காதே தமிழா இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா கசங்காதே தமிழா

உறங்காதே தமிழா இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா கசங்காதே தமிழா

தியாகிகள் நாங்கள் தமிழர்கள் நாங்கள்
அன்னியன் வந்தால் அடக்குவோம் நாங்கள்

வளங்கள் கொண்டோம் சுரண்டத்தானா?
சுகங்கள் எல்லாம் மழுங்கத்தானா?
திட்டங்கள் என்ன சட்டங்கள் என்ன
பலகோடி உயிரின் பலியில் தானா?
சில லட்சம் பேர்கள் சிறகினில் பறக்க
பலகோடி பேரின் சிறகையா முறிக்க?

தியாகம் செய்வோம் வா தியாகம் செய்வோம் வா தாயே
தியாகம் செய்வோம் வா தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தமிழா தியாகம் செய்வோம் வா

உறங்காதே தமிழா இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா கசங்காதே தமிழா

உறங்காதே தமிழா இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா கசங்காதே தமிழா

கற்க கசடற கற்பவை கற்றபின் துணிந்து நிற்க நமக்குத் தக
வதைகளை தடுத்திட வரங்களை படைத்திட
இளமையின் இச்சைகள் திசை திரும்புமடா

உனக்கென உழைத்திடும் உணவினை படைத்திட
உழுபவன் தோள்களில் வலு கூட்டிட வா
பிரிவினையை பிறர் வினையை
அறியாமை, அகவுணர்வை வேற்றுமையை
வேஷங்களை, தீச்சொல்லை
தீயவற்றை துறப்போம், மறப்போம்
தியாகம் செய்வோம் வா

தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தாயே தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தியாகம் செய்வோம் வா தமிழா
தியாகம் செய்வோம் வா

சொர்க்கத்தின் வாசலில் சுரங்கத்தை போட்டுத்தான்
திக்கற்று மாறுமே நெடுவாசல் போலவே
இதை மாற்ற நமக்கொரு தருவாயில் இருக்கிறோம்
தருவாயும் தவறினால் நரகத்தின் வாசலில்
தவிப்போமே நாமெல்லாம் தமிழா....தமிழா

தியாகிகள் நாங்கள் தமிழர்கள் நாங்கள்
அன்னியன் வந்தால் அடக்குவோம் நாங்கள்

வளங்கள் கொண்டோம் சுரண்டத்தானா?
சுகங்கள் எல்லாம் மழுங்கத்தானா?
திட்டங்கள் என்ன சட்டங்கள் என்ன
பலகோடி உயிரின் பலியில் தானா?
சில லட்சம் பேர்கள் சிறகினில் பறக்க
பலகோடி பேரின் சிறகையா முறிக்க?

தவறான நீதி தரும் எங்கள் பூமி
இருள் பாதை தேடி இனிபோகும் கூடி
எதுவாசல் என்றே தெரியாமல் நாளும்
திரிந்தோமே தமிழா திசைமாறு தமிழா

தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தாயே தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தியாகம் செய்வோம் வா தமிழா
தியாகம் செய்வோம் வா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தல' மனைவி பரிமாற, 'தளபதி' மனைவி சாப்பிட!!! வைரலாகும் புகைப்படம்